இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி, 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரி20 மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது.
இதன்படி, முதலில் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தரும் இங்கிலாந்து மகளிர் அணி, ரி20 சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்குப் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வருகைதந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கமைய, ரி20 போட்டிகள் பெப்ரவரி மாதம் கண்டியிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மார்ச் மாதம் தம்புள்ளையிலும் நடைபெறவுள்ளன.








