இலங்கையில் மின்சாரத் தேவையை முகாமைத்துவம் செய்வதற்காக இன்று (21) நான்கு வலயங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நேர அட்டவணையின்படி, மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்கள் வருமாறு:
- குழு 3: பிற்பகல் 4.30 மணி முதல் 5.00 மணி வரை
- குழு 4: பிற்பகல் 5.30 மணி முதல் 6.00 மணி வரை
- குழு 1: மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை
- குழு 2: மாலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை
தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரான நேஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் முன்வைத்த மின்வெட்டு அட்டவணைக்கு, ஒக்டோபர் 19 முதல் 21 வரையான மூன்று நாட்களுக்கும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒக்டோபர் 19ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









