இலங்கையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, இன்று (21) வர்த்தக வங்கிகளில் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335 ரூபாய் முதல் 336 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.
செலான் வங்கி
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.30 ரூபாவிலிருந்து 327.40 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலை 336.55 ரூபாவிலிருந்து 336.65 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
என்.டி.பி. வங்கி
என்.டி.பி. வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.10 ரூபாவிலிருந்து 327.30 ரூபாவாகவும், விற்பனை விலை 336.10 ரூபாவிலிருந்து 336.30 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கி
மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.61 ரூபாவிலிருந்து 327.66 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலை 335.73 ரூபாவிலிருந்து 335.79 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 325.58 ரூபாவிலிருந்து 325.83 ரூபாவாகவும், விற்பனை விலை 335.50 ரூபாவிலிருந்து 335.75 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கி
சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாவிலிருந்து 328 ரூபாவாகவும், விற்பனை விலை 335.50 ரூபாவிலிருந்து 336 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.







