சவூதி அரேபியாவில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக, சவூதி அரேபியாவுக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமான சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் எனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள யாத்ரீகர்கள் தமது பயண ஏற்பாடுகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
யாத்திரைக்குத் திட்டமிடுவோர் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது விழிப்புடன் இருப்பதுடன், உரிய உம்ரா குழுப் பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவசர நிலைமைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை எதிர்கொள்வதற்காக மாற்றுப் பயணத் திட்டங்களைத் தயாராக வைத்திருக்குமாறும் யாத்ரீகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








