‘சிரிலிய சவிய’ மோசடி தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரின் மேலதிக மருத்துவ அறிக்கைகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அதுவரை பிணை வழங்குவது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரமகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.








