2027ஆம் கல்வி ஆண்டுக்காக நாட்டிலுள்ள 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் வீதம் பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சம் மாணவர்களுக்கான நிதி, நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 5 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு உபகரணக் கொடுப்பனவு வழங்கும் இத்திட்டம் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டிலும் இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அமைச்சரவைக்குத் தெரிவித்துள்ளார்.








