இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (12) ஸ்திரமாகக் காணப்படுகின்றது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334 முதல் 335 ரூபா வரையான மட்டத்தில் பதிவாகியுள்ளது.
வங்கிகளின் இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
செலான் வங்கி
- கொள்வனவு விலை: 326.50 ரூபா
- விற்பனை விலை: 335.75 ரூபா
NDB வங்கி
- கொள்வனவு விலை: 326.40 ரூபா
- விற்பனை விலை: 335.40 ரூபா
மக்கள் வங்கி
- கொள்வனவு விலை: 326.82 ரூபா
- விற்பனை விலை: 334.92 ரூபா
கொமர்ஷல் வங்கி
- கொள்வனவு விலை: 324.84 ரூபா
- விற்பனை விலை: 334.75 ரூபா
சம்பத் வங்கி
- கொள்வனவு விலை: 327.00 ரூபா
- விற்பனை விலை: 335.00 ரூபா.








