நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதி விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின்போது நபர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








