முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (12) காலை தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன்போது, அவர் சிறிது நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவற்றின் முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அவர் தற்போது சாதாரண சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.








