எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி அனைத்து ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு ரயில்வே திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகப் போதுமான கொடுப்பனவு அதிகரிப்புகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, எதிர்வரும் 30ஆம் திகதி பல தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன.
இந் நிலையிலேயே, அன்றைய தினம் ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.







