பொல்கஹவெல சந்தி மற்றும் பேராதனைக்கு இடையில் இன்று (12) முதல் புதிய தினசரி ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் பாதையில், கடந்த 2ஆம் திகதி முதல் ரம்புக்கனை மற்றும் கம்பளை இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வழமைபோல் இயங்கி வருகின்றது.
இந்நிலையில், பொல்கஹவெல சந்தி மற்றும் பேராதனைக்கு இடையில் ரயில் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் நலன் கருதி, இன்று முதல் தினசரி ரயில் சேவையொன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவையின் நேர அட்டவணை பின்வருமாறு:









