திருகோணமலைக்கு வருகைதரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்காகக் கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்தொன்று இன்று (11) அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்க பங்குவ பகுதியில், 144ஆவது கிலோமீட்டர் மைல்கல்லுக்கு அருகில் அதிகாலை 3 மணியளவில் இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது பேருந்தில் சாரதியும் நடத்துநரும் மாத்திரமே இருந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு வருகைதரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்காகப் பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பாக ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








