சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்கு சவூதி அரேபியர்கள், இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் அமெரிக்கா, எகிப்து, ஜோர்தான், சிரியா, பலஸ்தீனம், சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குகின்றனர்.








