பொல்கஹவெல மற்றும் பேராதனைக்கு இடையில் புதிய தினசரி ரயில் சேவையொன்றை எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து தடைப்பட்டிருந்த மலையகப் பாதையிலான ரயில் சேவைகள், கடந்த 2ஆம் திகதி முதல் ரம்புக்கனைக்கும் கம்பளைக்கும் இடையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வழமைபோல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொல்கஹவெல – பேராதனை இடையே ரயில் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த எதிர்பார்க்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, புதிய தினசரி ரயில் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த ரயில் சேவைக்கான நேர அட்டவணை பின்வருமாறு:








