காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 170 ஊடகவியலாளர்கள் ‘பயங்கரவாதிகள்’ என இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ் நிராகரித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்தக் கூற்றை ஆதரிப்பதற்கு “சிறிதளவும் ஆதாரம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட விசாரணையில், ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொண்டவர்களில் சிலர் உண்மையில் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் உள்ளிட்ட காஸாவில் இயங்கும் அமைப்புகளைச் சேர்ந்த “பயங்கரவாதிகள்” எனக் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த அல்பனீஸ், கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு “எந்த ஆதாரமும் இல்லை” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் விரைவில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம்: அல்ஜசீரா









