சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (05) நடைபெறவுள்ள எதிர்க்கட்சிக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிப்பது தொடர்பில் பாராளுமன்ற எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைச் சமர்ப்பிக்கும் திகதி தொடர்பில் நாளைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.







