ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் 4,365 ரூபாவுக்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் சிலிண்டர் 1,750 ரூபாவுக்கும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 815 ரூபாவுக்கும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.








