ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஐ.நா. நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் “குடியேற்றவாசிகளின் பயங்கரவாதம்” அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு அது புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை எனக் கருதப்படும் நிலையில், மேற்குக் கரையில் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்குக் கரையில் அதிகரித்து வரும் குடியேற்றவாசிகளின் வன்முறைக்கான காரணிகள் குறித்து Al Jazeera’s Inside Story நிகழ்ச்சியில் நிபுணர்கள் கலந்துரையாடியுள்ளனர்.








