மக்கள் போராட்ட இயக்கத்தினால் இன்று (03) புறக்கோட்டையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டப் பேரணி இன்று பிற்பகல் பொரளை கெம்பல் மைதானத்திற்கு அருகில் ஆரம்பமானது.
பொரளை சந்தியிலிருந்து மருதானை ஊடாக புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை பேரணி சென்றடைந்ததுடன், அங்கு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, சட்டவிரோதமான முறையில் கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், போராட்டத்தில் கலந்துகொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.








