கல்கிஸ்ஸை, கொலுமடம பொருபனை கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொருபனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, பொருபனை இரும்புப் பாலத்திற்கு அருகில் முன்னால் பயணித்துக்கொண்டிருந்த மிதிவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மிதிவண்டி ஓட்டுநர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








