உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தம்மை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு தொடர்பான விடயங்களை ஆராய்ந்த பின்னர், அதன் கட்டளையை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.








