தற்போது 8 சதவீதமாக காணப்படும் பணவீக்கம், இந்த ஆண்டிலும் 2027ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலும் தொடர்ந்து உயர் மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குப் பின்னரே பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்க அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்காக, பணவியல் கொள்கை மற்றும் நிதியியல் கொள்கை உள்ளிட்ட கொள்கை ரீதியான கருவிகளைப் பயன்படுத்தி ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிச்சயமற்ற நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், அவற்றால் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்காக மத்திய வங்கியின் பணவியல் கொள்கையையும் அரசாங்கத்தின் நிதியியல் கொள்கையையும் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








