இத்தாலிய பாடசாலைகளில் புர்கா மற்றும் நிகாப் உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவதைத் தடை செய்யும் சட்டத்தை பிரதமர் ஜோர்ஜியா மெலோனியின் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டு முதல் இத்தாலிய மொழி பேசாத மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு வகுப்பில் 30 சதவீதமாக மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுவோருக்கு அதிகபட்சமாக 1,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்ட ஆணை உடனடியாக அமுலுக்கு வரக்கூடியது என்றாலும், 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
புதிய விதிகள் நாடு முழுவதும் சுமார் 1,000 வகுப்பறைகளை பாதிக்கும் என கல்வி அமைச்சர் கியூசெப்பே வால்டிடாரா தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நடவடிக்கை தொடர்பில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
இத்தாலியின் 2022–23 கல்வியாண்டு தரவுகளின்படி, அந்நாட்டின் பாடசாலை மாணவர்களில் 11.2 சதவீதம் பேர் வெளிநாட்டு குடியுரிமை கொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Al Jazeera)







