ஹொரவ்பொத்தானை, இஹலகும்புக்கொல்லாவ பகுதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து 21 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கடந்த 24ஆம் திகதி தனது சகோதரியுடன் மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.
இதன்போது, தனது சகோதரியிடம் விறகுகளை ஒப்படைத்துவிட்டு, தான் பின்னர் வருவதாகக் கூறி அங்கிருந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர் மீண்டும் வீட்டுக்குத் திரும்பாத நிலையில், பிரதேச மக்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து குறித்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இளைஞரின் சடலத்தில் காயம் ஒன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








