அதிக மழை காரணமாக அதிகரித்திருந்த கங்கைகளின் நீர்மட்டம் தற்போது மீண்டும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், குடா கங்கை – மில்லக்கந்த பகுதி, கிங் கங்கை – பத்தேகம பகுதி மற்றும் நில்வலா கங்கை – தல்கஹகொட பகுதிகளில் இன்னமும் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பகுதிகளிலும் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நில்வலா கங்கையின் நீர்மட்டம் பனாதுகம பகுதியில் அவதான நிலையை எட்டியிருந்த போதிலும், தற்போது அங்கும் நீர்மட்டம் குறைந்து வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.








