சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கடந்த நாட்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வெகுவிரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் தொடர்பான 40க்கும் மேற்பட்ட விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.








