நிலவும் பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டி பஸ் நிலையம் இன்று (25) பிற்பகல் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.
பஸ் நிலையத்தின் வடிகால் தொகுதி அடைபட்டதால், மழைநீர் பஸ் நிலையத்தினூடாகப் பாய்ந்ததாக அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பயணிகள் மட்டுமன்றி பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








