பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவுக்கான இலங்கை தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட மூன்று முக்கிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி,
- பிலிப்பைன்ஸுக்கான இலங்கையின் புதிய தூதுவர் – அன்சுல் பானு ஜோன்
- கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் – சந்தன ரோஹண குமார அம்பகொல்ல
- ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவர் – நுசித் குமாரதுங்க
ஆகியோரின் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.








