ஒரு லீற்றர் குடிநீர் போத்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட இரட்டிப்பு விலைக்கு விற்பனை செய்த எல்லை பிரதேச உணவகத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எல்லை, ரயில் நிலைய வீதியில் இலக்கம் 18இல் அமைந்துள்ள Mandala Cafe & Bar Pvt Ltd என்ற உணவகத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அந்த போத்தலுக்கான நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாக இருந்துள்ளது.
2025 ஏப்ரல் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட 2430/15ஆம் இலக்க விசேட வர்த்தமானியின் 93ஆம் இலக்க உத்தரவின் கீழ் இந்த 100 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அமுலில் இருந்த 100 ரூபாய் விலை தற்போது நடைமுறையில் உள்ள ஒரு லீற்றர் குடிநீருக்கான MRP அல்ல என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2026 ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட 2492/29ஆம் இலக்க விசேட வர்த்தமானியின் அடிப்படையில், உள்நாட்டில் பொதியிடப்பட்ட குடிநீருக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
- 500ml – 999ml: ரூ.80
- 1L – 1.499L: ரூ.120
- 1.5L – 1.999L: ரூ.150
- 2L – 2.499L: ரூ.180
- 5L – 6.999L: ரூ.400
இதன்படி, ஒரு லீற்றர் முதல் 1.499 லீற்றர் வரையிலான குடிநீர் போத்தலின் தற்போதைய MRP ரூ.120 ஆகும்.
உணவகங்கள், கஃபேக்கள், ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களில் குடிநீர் போத்தல்களை கொள்வனவு செய்யும் போது, நடைமுறையில் உள்ள MRP-ஐ சரிபார்த்து, செலுத்திய தொகையை உறுதிப்படுத்தும் வகையில் பற்றுச்சீட்டு அல்லது ரசீதைப் பெற்றுக்கொள்ளுமாறு CAA நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சுற்றுலாப் பகுதிகளில் அல்லது வேறு எந்த இடத்திலும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வது, நிர்ணயிக்கப்பட்ட MRP-ஐ விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்காது எனவும் CAA வர்த்தகர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
குடிநீர் போத்தல்களுக்கு அதிக விலை அறவிடுதல் உள்ளிட்ட சந்தை முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற CAA அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும்.