ஈரான் தனது அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதுடன், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கான முழுமையான சுதந்திரத்தை மீள உறுதிப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானுடன் “வெளிப்படையான மற்றும் ஆழமான கலந்துரையாடல்” ஒன்றை நடத்தியதாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கோஸ்டா தெரிவித்துள்ளார்.
“மோதல்களைத் தீர்ப்பதற்கும், பிராந்தியம் முழுவதும் நீடித்த அமைதியை உறுதி செய்வதற்கும் உரையாடல் மட்டுமே ஒரே வழி” என ஈரான் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் தனது அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை முழுமையாக மீள நிலைநிறுத்த வேண்டும் என்றும் கோஸ்டா கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அணுசக்தி முகமையான IAEA உடனான ஒத்துழைப்பை ஈரான் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அனைத்து இராஜதந்திர முயற்சிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் கோஸ்டா தெரிவித்துள்ளார்.
(அல் ஜசீரா)








