அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரில் குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கார் மற்றும் பேருந்து ஒன்றுடன் தொடர்புடைய விபத்து சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








