நாளை (17) முன்னெடுக்கப்படவுள்ள ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (16) இரவு சேவையில் ஈடுபடவிருந்த 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்படவுள்ள ரயில், இரவு 8.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் புறப்படவுள்ள ரயில் மற்றும் இரவு 9.30 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் இரவு அஞ்சல் ரயில் உள்ளிட்ட 6 சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது தொடர்பில் ரயில்வே திணைக்களம் அல்லது போக்குவரத்து அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடவில்லை.








