தெற்கு லெபனானின் நபதியே மாவட்டத்தில் உள்ள கஃபர் ரெமான் (Kfar Reman) பகுதியில் இஸ்ரேல் இராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் (NNA) தெரிவித்துள்ளது.
மேலும், பின்த் ஜுபைல் மாவட்டத்தில் உள்ள வாடி அல்-சலூகி (Wadi al-Salouqi) பகுதி மற்றும் அர்னூன் (Arnoun) நகரின் புறநகரப் பகுதிகளிலும் இஸ்ரேல் பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டதாக NNA குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் கஃபர் ரெமான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.








