முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
எயார்பஸ் விமான கொள்வனவு விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக சமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.









