ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கான அகல உடல் (wide-body) விமானங்களை கொள்வனவு செய்த விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தார்.









