கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இருந்தே அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.
அங்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர், நாமல் ராஜபக்ஷ புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.







