ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது 80ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 6) கொண்டாடவுள்ளது.
இதனை முன்னிட்டு, புறக்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நினைவு நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வு, நிறைவேற்று ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 1946ஆம் ஆண்டு டி. எஸ். சேனாநாயக்கவினால் நிறுவப்பட்டது. பல தசாப்தங்களாக இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக அக்கட்சி இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









