இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160ஆவது ஆண்டு நிறைவு எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்படவுள்ளது.
1866ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் திகதி நிறுவப்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களம், இந்த ஆண்டு 160 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இதையொட்டி, ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் பொலிஸாரின் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், செப்டம்பர் 4 முதல் 6ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பொலிஸ் களப்படை தலைமையகத்தில் பொதுமக்களுக்கான கண்காட்சி நடைபெறவுள்ளது.
கண்காட்சியில் பொலிஸ் பிரிவுகளின் சேவைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு தொடர்பான தகவல்கள் வழங்கப்படுவதுடன், மோட்டார் சைக்கிள், குதிரை, பொலிஸ் நாய் மற்றும் பரசூட் சாகசக் காட்சிகளும் இடம்பெறவுள்ளன.
மேலும், செப்டம்பர் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களும் மக்களுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.









