ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு பொது விடுமுறை நாட்களில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.124.5 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை 325,316 வாகனங்கள் பயன்படுத்தியதாக RDA தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி, 163,763 வாகனங்கள் பயணித்ததுடன், அதன் மூலம் ரூ.60.4 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
அடுத்த நாளான ஆகஸ்ட் 27ஆம் தேதி, 161,553 வாகனங்கள் பயணித்த நிலையில், ரூ.64.1 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வாகனப் போக்குவரத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (E01) மற்றும் வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை (E02) ஆகியவற்றில் பதிவாகியுள்ளதாக RDA குறிப்பிட்டுள்ளது.









