இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட 11 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இன்று (25) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிக்கன் குடியரசு, கானா, புரூணை, சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கலந்துகொண்டனர்.
புதிய தூதுவர்கள்:
- Jorge Geraldo Kadri – பிரேசில் கூட்டாட்சி குடியரசின் இலங்கைக்கான தூதுவர்; கொழும்பை தளமாகக் கொண்டவர்.
- Wei Huaxiang – சீன மக்கள் குடியரசின் தூதுவர்; கொழும்பை தளமாகக் கொண்டவர்.
- Dr Robert Zischg – ஆஸ்திரிய குடியரசின் தூதுவர்; புதுடெல்லியை தளமாகக் கொண்டவர்.
- Eric S. Meyer – அமெரிக்காவின் தூதுவர்; கொழும்பை தளமாகக் கொண்டவர்.
- Francisco Manuel Comprés Hernández – டொமினிக்கன் குடியரசின் தூதுவர்; புதுடெல்லியை தளமாகக் கொண்டவர்.
- Dr Mohammed Abdalla Ali Eltom – சூடான் குடியரசின் தூதுவர்; புதுடெல்லியை தளமாகக் கொண்டவர்.
- Nubiela Yanarith Ayala – பனாமா குடியரசின் தூதுவர்; ஹனோயை தளமாகக் கொண்டவர்.
புதிய உயர்ஸ்தானிகர்கள்:
- D.M. Salahuddin Mahmud – பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர்; கொழும்பை தளமாகக் கொண்டவர்.
- Prof. Kwasi Obiri-Danso – கானா குடியரசின் உயர்ஸ்தானிகர்; புதுடெல்லியை தளமாகக் கொண்டவர்.
- Siti Arnyfariza Md Jaini – புரூணை தாருஸ்ஸலாம் நாட்டின் உயர்ஸ்தானிகர்; புதுடெல்லியை தளமாகக் கொண்டவர்.
- Dharamkumar Seeraj – கயானா கூட்டுறவுக் குடியரசின் உயர்ஸ்தானிகர்; புதுடெல்லியை தளமாகக் கொண்டவர்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் Dr நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.









