மன்னாரில் நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் உலர் இஞ்சித் தொகை ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்த இஞ்சி தொகையானது 24.08.2026 இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதற்கமைய, வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், நறுவிலிக்குளம் மற்றும் வங்காலை கடற்கரைப் பகுதிகளில் இருந்த சந்தேகத்திற்கிடமான 2 பொதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கடத்தல்காரர்களால் அந்த கடற்கரைப் பகுதிகளில் கைவிட்டுச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராமிற்கும் அதிகமான உலர் இஞ்சித் தொகை கடற்படையினால் மீட்கப்பட்டது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர் இஞ்சித் தொகை முருங்கன் மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









