சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கொட்டாவை பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது.
ஊடகத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் தகுதியான ஊடகவியலாளர்களை இலக்காகக் கொண்டு இந்த விசேட வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்

இடம்: கொட்டாவை

ஒரு வீட்டின் விலை: 5.19 மில்லியன் ரூபாய் (சலுகை அடிப்படையில்)
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்
• ஊடகத்துறையில் தொடர்ச்சியாக குறைந்தபட்சம் 10 வருட சேவை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
• விண்ணப்பதாரர் 30 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
• அரசாங்க தகவல் திணைக்களத்தினால் (DGI) வழங்கப்பட்ட 2025 அல்லது 2026 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ ஊடக அடையாள அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
பணிப்பாளர் (ஊடகம்),
சுகாதார மற்றும் ஊடக அமைச்சு,
இலக்கம் 163, “அசிதிசி மெதுர”,
கிருலப்பனை மாவத்தை,
பொல்ஹேன்கொட, கொழும்பு 05.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 2026 செப்டம்பர் 18
விண்ணப்பப் படிவங்களை www.media.gov.lk என்ற சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஊடகத்துறையில் பணியாற்றும் தகுதியுள்ள நண்பர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிர்ந்து, அவர்களுக்கும் இந்த வாய்ப்பை அறியச் செய்யுங்கள்









