பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்திருந்த நிலையில், பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று (24) பரிசீலிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, சமிந்த விஜேசிறியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.








