இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள மெசினா அருங்காட்சியகத்தில், புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.
இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அருங்காட்சியகத்தில் பாதுகாவலர்கள் பணியில் இருந்த போதிலும், பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலாரம் அமைப்புகளை செயலிழக்கச் செய்த மர்ம நபர்கள், உள்ளே நுழைந்து பாதுகாப்பான கண்ணாடிப் பெட்டியை உடைத்து ஓவியங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
எனினும், தப்பிச் செல்லும் அவசரத்தில் இரண்டு ஓவியங்களை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இத்தாலி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், திருடப்பட்ட ஓவியங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.









