சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத் நோக்கி நீண்ட பேரணியை ஆரம்பித்துள்ளனர்.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஆட்சி செய்யும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
போராட்டத்தைத் தடுக்க முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்தப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
(அல் ஜஸீரா)







