இந்தியாவின் பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோயில் வளாகத்தில் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நிர்வாக அதிகாரிகள், மீட்புப் பணிகள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பீகார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








