எதிர்வரும் இரண்டு மாதங்களிலும் நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் குறைவடைவதால், உடலால் உணரும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.நிலவும் வறட்சியான வானிலை காரணமாக அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள பல நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளமையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக இந்த நாட்களில் உடலால் உணரும் வெப்பமும் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6.00 மணியளவிலேயே 29 செல்சியஸ் பாகையைத் தாண்டிய வெப்பநிலை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









