(மர்சூக் எம். சல்பி)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சட்ட உத்தியோகத்தர் (ஒப்பந்த அடிப்படையில்) பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்திருப்பதுடன், குறைந்தபட்சம் ஒரு வருட தொழில் அனுபவத்தையும் கொண்ட, 21 முதல் 45 வயதுக்குட்பட்ட தகுதியானவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இப்பதவிக்கான மாதாந்த சம்பளம் ரூ. 82,150 ஆகும். அத்துடன் EPF/ETF வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை 2026 ஒக்டோபர் 08ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை www.muslimaffairs.gov.lk என்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம்.











