யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 18 ஆவது நாளாக 07.06.2026 முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் மாத்திரம் 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட இரண்டு சிறுவர்களின் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 302 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 298 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிறுவர்களின் என்பு கூட்டு தொகுதிகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், சிறுவர்களுடைய இரு எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் மேலதிக அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.









