தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளை பின்பற்றி போட்டித்தன்மையை இலக்காகக் கொண்டு புதிய சந்தைகளை கண்டுபிடிப்பதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிலையான அபிவிருத்தி சபை மன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு முதலீடு மற்றும் மூலதனத்தை ஈர்ப்பதன் மூலம் பொருளாதாரத்தை சீர்திருத்த இலங்கை எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.